ஒரு சீரியல் சஸ்பெண்ட்… இன்னொரு சீரியல் டிஸ்மிஸ்… விஜய் டிவியில் அதிரடி மாற்றங்கள்!

Vijay TV going to temporarily stop some serials for Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக, சில சீரியல்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் சில சீரியல்களின் ஒளிப்பரப்பு பிக் பாஸ் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. ஏற்கனவே ஒளிப்பரப்பான 4 சீசன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஒளிப்பரப்பாகவுள்ள 5ஆவது சீசனையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பு காரணமாக விஜய் டிவியின் சில சீரியல்களின் ஒளிப்பரப்பை மூன்று மாதங்களுக்கு அதாவது பிக் பாஸ் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ரஞ்சித், ப்ரியா ராமன், ஸ்ரீநிதி நடிக்கும் ’செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிப்பரப்பு, பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை நிறுத்தி வைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு சீரியலான ஜாக்லின் நடிக்கும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கை கவனத்தில் கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பிற்காக ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும், சில சீரியல்களின் ஒளிப்பரப்பு நேரமும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv going to temporarily stop some serials for bigg boss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com