விஜய் டிவி முக்கிய சீரியல் நிறுத்தம்… காரணம் இதுதானா?

தற்போது ஒளிபரப்பாகிவரும் தமிழ் டிவி சீரியல்கள் சில மே 31ம் தேதி வரை ஒளிபரப்புவதற்கான காட்சிகள் தயாராக இல்லாத சூழ்நிலையில், அந்த சீரியல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Vijay tv hit serial stopped, anbudan kushi, விஜய் டிவி, விஜய் டிவி முக்கிய சீரியல் நிறுத்தம், அன்புடன் குஷி, vijay tv hit serial stopped due to covid 19 secnd wave, covid 19 second wave, tamil tv serial news

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, படப்பிடிப்பு நடத்த முடியாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் ஒன்று நிறுத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் அத்தியாவசியப் பணிகளுகு தவிர மற்ற பணிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மே 31ம் தேதி வரை திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நடைபெறாது என்று ஃபெப்ஸி தலைவர் இயக்குனர். ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

ஃபெப்ஸி அமைப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் திரைப்படம் மற்றும் டிவி சீரியல்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் படக்குழுவினர் ஃபெப்ஸி தடைவிதிப்பதற்கு முன்னதாகவே வேகவேகமாக படப்பிடிப்பு நடத்தி 2-3 வாரம் எபிசோடுகளுக்கு தேவையான கதையை தயார் செய்துவிட்டனர். ஆனால், அவற்றுக்கு டப்பிங், எடிட்டிங் செய்வது என்பது பெரிய சவாலாக உள்ளது.

அதே நேரத்தில், கொரோனா தொற்றால், சினிமா நடிகர்களும் சீரியல் நடிகர்களும் பாதிக்கப்பட்டு மரணிக்கும் செய்திகள் திரைத்துறையினரையும் பொதுமக்களையும் கவலை அடைய வைத்துள்ளது.

தற்போது ஒளிபரப்பாகிவரும் தமிழ் டிவி சீரியல்கள் சில மே 31ம் தேதி வரை ஒளிபரப்புவதற்கான காட்சிகள் தயாராக இல்லாத சூழ்நிலையில், அந்த சீரியல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி சீரியல், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதாம். அன்புடன் குஷி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில், திடீரென நிறுத்தப்படுவதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த அன்புடன் குஷி சீரியல் 4 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது. அன்புடன் குஷி சீரியலில் ஹீரோவாக பிரஜின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக முதலில் மான்ஸி ஜோஸி நடித்தார். பின்னர், அவருக்கு பதிலாக ஸ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். நல்ல கவனம் பெற்று வந்த சூழலில் கொரோனா பரவல் சூழல் காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் சீரியல் நிறுத்தப்படுவது ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv hit serial stopped because cant shooting due to covid 19 second wave

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com