விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலின் முடிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலின் க்ளைமாக்ஸ் எபிசோடு ரெடியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் கடந்த சில மாதங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவு ஏற்பட்டதை அடுத்து இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 2021-ல் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் சசிந்தர் புஷ்பலிங்கம், ஃபெரோஸ் கான், மரியா ஜூலியானா மற்றும் பவித்ரா ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலின் முடிவுத் தேதியை அறிவித்துவிட்ட சீரியல் குழுவினர், தற்போது க்ளைமாக்ஸ் எபிசோட்களை படமாக்கி வருகின்றனர். ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலின் க்ளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் ஆகஸ்ட் 2021-ல் தொடங்கப்பட்டு 650 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்த சீரியல் நவம்பர் 11-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“