பிரியங்காவுக்கு பெரிய மனசு… ரசிகர்களை ஏமாற்றவே மாட்டாங்களாம்!

விஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் வெளியிட்ட அவருடைய பிகினி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

priyanka jain, priyanka jain bikini photosm, vijay tv, விஜய் டிவி, காற்றின் மொழி, பிரியங்கா ஜெயின், பிரியங்கா ஜெயின் பிகினி போட்டோஸ், kaatrin mozhi serial actress priyanka jain, priyanka jain bikini photos goes viral, kaatrin mozhi serial, tamil serial actress news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் பிரியங்காவுக்கு பெரிய மனசு ரசிகர்களை ஏமாற்றவே மாட்டாங்களாம் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களின் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி முதல் உள்ளூர் சாமனியன் வரை யாரும் யாருடன் வேண்டுமானலும் உரையாடலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. சினிமா நடிகர்கள் நடிகைகளைவிட டிவி சீரியல் நடிகர்கள், நடிகைகள் சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுடன் உடனுக்குடன் நேரடியாக உரையாடி மிகவும் நெருக்கமாகவும் பிரபலமாகவும் உள்ளனர்.

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றின் மொழி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா ஜெயின் தனது அமைதியான அழகாலும் கியூட்டான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். மாடலிங்கிலும் நடிப்பிலும் ஆர்வம் உள்ள பிரியங்கா ஜெயின் தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பிரியங்கா ஜெயின் வாய் பேச இயலாத பெண்ணாக தாவணியில் உடையில் நடித்து வருகிறார். மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ஜெயின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த மிகவும் மாடர்னான ஒரு பெண். ஆனாலும், சீரியலில் அவர் தாவணியில் ரொம்ப அழகாக நடித்து வருகிறார்.

காற்றின் மொழி சீரியலில் நடிப்பதற்கு முன்பு, பிரியங்கா ஜெயின் ஆல்பங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். அதற்குப் பிறகு, 2015ல் நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட சினிமாவில் ’ரங்கிதரங்காவில்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார். காற்றின் மொழி சீரியலில் இவருடைய அமைதியான அழகுக்காகவும் க்யூட்டான் நடிப்புக்காகவுமே பலரும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில், பிரியங்கா ஜெயின் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களை டிவி சீரியலில் டிரெடிஷனாலான உடையில்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். அதனால், ரசிகர்கள் பார்ப்பதற்கு உங்களுடைய பீச் பிகினி போட்டோக்களை வெளியிடுவீர்களா? என்று கேட்டார். ரசிகர்களின் இந்த விருப்பதை ஏற்றுக்கொண்ட பிரியங்கா ஜெயின் அவர் தனது பிகினி உடை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா ஜெயினுக்கு ரொம்ப பெரிய மனசு… இவர், ரசிகர்களை ஏமாற்றவே மாட்டார் என்று நெட்டிசன்கள், ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால், காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் வெளியிட்ட அவருடைய பிகினி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv kaatrin mozhi serial actress priyanka jain bikini photos goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com