Advertisment

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; புகைப்படம் வைரல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் நடிகை வைஷ்ணவி தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களி இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள்ல் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vijay tv, actress vaishnavi rajasekaran, Kaatrin Mozhi serial, actress vaishnavi rajasekaran engagements, விஜய் டிவி, காற்றின் மொழி சீரியல், நடிகை வைஷ்ணவி ராஜசேகரன், வைஷ்ணவி ராஜசேகரன் நிச்சயதார்த்தம் புகைப்படம், வைரல், vaishnavi rajasekaran photos, vijay tv, viral, Kaatrin Mozhi vaishnavi rajasekaran, tv serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் நடிகை வைஷ்ணவி தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களி இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள்ல் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்ற முக்கிய சீரியல்களில் ஒன்று, இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

காற்றின் மொழி சீரியலில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிற நடிகை வைஷ்ணவி ராஜசேகரனின் நடிப்பு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை வைஷ்ணவி ராஜசேகரன் சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், வைஷ்ணவிக்கும் காதலர் சாய் விக்னேஷுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வைஷ்ணவி ராஜசேகரன், தனது திருமண நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் மற்றும் டிவி சீரியல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்ததால் அவருடைய நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வைஷ்ணவியின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

காற்றின் மொழி சீரியல் ரோஸி, வைஷ்ணவி தனது நிச்சயதார்த்தத்தில் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு குறிப்பிடுகையில், வைஷ்ணவி ராஜசேகரன் இந்த விழா பற்றி, இது என்றென்றைக்குமான தொடக்கம் என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.

தான் வெட்கத்தில் சிரிக்கும் சிரிக்கும் புகைப்படம் குறித்து வைஷ்ணவி, “நான் எப்போதாவது சிரிப்பதை நிறுத்துவேனா? நிச்சயம் இல்லை” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை வைஷ்ணவிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோவர்களாக உள்ளதால் வைஷ்ணவி - சாய் விக்னேஷ் ஜோடிக்கு ரசிகர்கள் தெரிவிக்கும் அட்வான்ஸ் திருமண வாழ்த்து மழையால் அவருடைய இன்ஸ்டா பக்கம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Viral Vijay Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment