அடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்!

என்னை குனியவச்சு முதுகில் லேசா முழங்கையை ஊணியபிறகுதான் விட்டார்.

By: Updated: July 10, 2020, 02:19:49 PM

vijay tv show: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு ரியாலிட்டி ஷோவின் மூலம் பிரபலம் ஆனவர் தீனா.கைதி படத்தின் மூலம் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகம் ஆகி, இப்போது தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து இருக்கார். கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் விஜய் டிவி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தபடியே கலந்துக் கொள்வார்கள்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான் தீனாவுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரியங்கா உரையாடினார். மாஸ்டர் பட அனுபவம் குறித்து தீனா பேசுகையில், நாங்க ஒரு ஓரமா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, தளபதி வந்தார். என்னையும் கூப்பிட்டு இருந்தால் வந்து பேசிக்கொண்டு இருந்திருப்பேனேன்னு சொன்னார். பிறகு ஒரு ஜோக் சொல்லலாம்னு, ஒருத்தனை எல்லாரும் கோபாலு கோபாலுன்னு கூப்பிட்டாங்க ஏன் சொல்லுங்க அண்ணேன்னு கேட்டேன். அவர் ரொம்ப சீரியஸா அப்படி இப்படி திரும்பி யோசித்தார். கொஞ்ச நேரம் கழித்து தெரியலையேன்னு சொன்னார். ஏன்னா..அவன் பேரு கோபாலுன்னு சொன்னேன். ரொம்ப கடுப்பாயிட்டார். என்னை குனியவச்சு முதுகில் லேசா முழங்கையை ஊணியபிறகுதான் விட்டார்.

என்னை கடுப்பேத்துனியே..இப்போ நான் கேட்கறேன்னு சொல்லி, ஏரியா இதுக்கு ஆப்போசிட் என்னன்னு கேட்டார். நான் ரொம்ப புத்திசாலித்தனா சொல்றதா நினைச்சுகிட்டு, ஆப்போசிட் ஏரியான்னு சொன்னேன். இல்லை.. ஏரியாவுக்கு ஆப்போசிட் இறங்குய்யான்னு சொன்னார். விஜய் டிவியில் எல்லாரையும் போன் செய்து கலாய்க்கறது நீதானன்னு கேட்டார். ஆமாம்னு சொன்னேன் .. ஒரு வீடியோ எனக்கு காண்பின்னு கேட்டார். உடனே குஷியோட கேரவனுக்கு ஓடினேன். போனில் இருந்த ஒரு வீடியோவை காண்பிச்சேன். அது சிம்பு சார் நம்ம ஷோவுக்கு வந்து இருந்தபோது எடுத்த ஷோ.. தளபதி அதை ரசிச்சு பார்த்தார்னு தீனா சொன்னார். அப்போது குறுக்கிட்ட பிரியங்கா, நான் அந்த ஷோவில் ரெட் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு அழகா இருந்தேன்..தளபதி பார்த்தராடான்னு கேட்க, அதை ஸ்கிப் பண்ணிட்டு வெறும் காமெடியை பார்த்தார்னு பிரியங்காவுக்கு பல்ப் கொடுத்தார் தீனா.

பணம் கொட்டு தொழில்கள்.. அதுவும் வீட்டில் இருந்தப்படியே செய்யலாம்! என்னென்ன தெரியுமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv kalakka povathu yaaru dheena vijaytv dheena priyanka video call priyanka dheena hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X