/tamil-ie/media/media_files/uploads/2023/06/KPY-Natraj.jpg)
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நட்டி நடராஜ்
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரமோவில், சமீபத்தில் மறைந்த மயில்சாமி, மனோபாலா, வடிவேலு பாலாஜி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் உருவம் பறித்த விருது கேடயங்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. ஸ்டாண்டப் காமெடியை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் தங்களது திறமையை வெளியுலகத்திற்கு நிரூபித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ள கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ளும் க்ராண்ட் பினாலே என்று அழைக்கப்படும் இறுதி எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படும் கேடயங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நடிகர் மயில்சாமி, மனோபாலா, சில வருடங்களுக்கு முன்பு இறந்த வடிவேல் பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Manobala-Mayilsamy-Balaji.jpg)
இந்த விருதுகள் தொடர்பான ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், இதில் பேசிய மைனா, தாடி பாலாஜி, அமுதவாணன் உள்ளிட்ட பலரும் கண்கலங்கி அழுகின்றனா. இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் டிவியின் இந்த செயலை பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் இந்த வரிசையில் நடிகர் விவேக் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல் இந்த மாதிரி அழுகாச்சி சீன்களை அடிக்கடி போடாதீங்க என்றும், இறந்தவர்களின் போட்டோவை பயன்படுத்தி அவருகளின் பெயரால் உங்களுக்கு டிஆர்பி ஏற்றிக் கொள்ளாமல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சில ரசிகர்கள் விஜய் டிவிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.