/indian-express-tamil/media/media_files/5IGm8WWsIkObRp2Sht6e.jpg)
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பிரபல நடிகர் மரணம்; சோகத்தில் சின்னத்திரை
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பிரபல நடிகர் மரணம் அடைந்துள்ளார். இந்த சோக நிகழ்வு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90ஸ் கிட்ஸ் மிகவும் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக கனா காணும் காலங்கள் இருந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் 2006 அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி 2009 ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நீடித்தது. மெகா சீரியலில் இடம்பெற்ற பல்வேறு நடிகர்கள் பின்னாளில் சினிமா படங்களில் நடித்து புகழ் பெற்றனர்.
பொதுவாக சீரியல்கள் என்றாலே, சென்டிமென்ட், அழுகை சீன்கள், போட்டி, பொறாமை, என்ற டெம்ப்ளேட்டை கனா காணும் காலங்கள் உடைத்தது. அதற்கு மாறாக பள்ளியை மையமாக வைத்து, அங்கு நடைபெறும் காட்சிகள், மாணவர்கள், அவர்களது குடும்பம், நட்பு உள்ளிட்டவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இதனால் இந்த சீரியல் சிறுவர் முதல் பெரியோர் வரை ஈர்ப்பை ஏற்படுத்தியது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் அருகில் எடுக்கப்பட்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு அதுவும் வெற்றியடைந்தது.
கனா காணும் காலங்கள் தொடரில் PT வாத்தியாராக நடித்தவர் அன்பழகன். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அன்பழகன் அடுத்தடுத்து ரெட்டை வால் குருவி, தாயுமானவன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் அண்ணா, சீதாராமன் சீரியல்களிலும் அன்பழகன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் அன்பழகன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது உயிரிழப்பு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.