கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும், தீபிகா வெங்கடாசலமும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றத் தொடர் கனா காணும் காலங்கள். பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடர் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்த நடிகர்கள் தற்போது சின்னத்திரை சீரியல்களில், முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக கலக்கி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஜி.பி முத்து நடிகரே இல்லை: வெங்கட் பிரபு

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, கல்லூரி கால நட்பை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியல் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தீபிகா- ராஜா இருவரும் ஒரே சீரியலில் நடித்தாலும் காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருவருமே கடந்த 6 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரது வீட்டிலும் அவர்களுக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இதைப்பற்றி பேசும்போது இருவருமே நாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது என கேட்க, உடனடியாக வீட்டில் பேசி ஒரு வாரத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்து, இந்த திருமணம் நடந்துள்ளது. நடிகர் ராஜா வெற்றி பிரபுவை விட தீபிகா ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிதாக திருமணம் ஆகி உள்ள தீபிகா – ராஜா வெற்றி பிரபு ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil