/indian-express-tamil/media/media_files/YE908AwfEaqSVX32upbq.jpg)
நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் – கே.பி.ஓய் பாலா
உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படும் காமெடி நடிகர் வெங்கல் ராவ்க்கு, நடிகர் சிம்புவைத் தொடர்ந்து கலக்கப்போது யாரு (KPY) பாலாவும் பண உதவி செய்துள்ளார்.
சினிமாவில் வில்லன் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் வெங்கல் ராவ். பின்னர் காமெடி நடிகராக மாறி வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தொடர்ந்து நடித்தார். வடிவேலு - வெங்கல் ராவ் காம்பினேஷனில் வந்த காமெடி காட்சிகள் இன்றளவும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
இந்தநிலையில், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார் வெங்கல் ராவ். பின்னர் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், 'எனக்கு கை, கால் விழுந்துவிட்டது; ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவ வேண்டும்' என்று உருக்கத்துடன் கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில், வெங்கல் ராவின் கோரிக்கையை அறிந்த நடிகர் சிம்பு இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். இது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பலருக்கும் உதவிகளை செய்துவரும் KPY பாலாவும் இப்போது வெங்கல் ராவுக்கு உதவியிருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்திருக்கும் கே.பி.ஓய் பாலா, "எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டதை பார்க்கும்போது எனது மனதே கேட்கவில்லை. எனவே என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நான் கொடுத்திருக்கிறேன். நீங்களும் உதவுங்கள். அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது. சீக்கிரம் குணமாகி வாருங்கள் அண்ணா" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வடிவேலுவுடன் நடித்த பாவா லட்சுமணன் உடல்நிலை சரியில்லாதபோதும் பாலா உதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைத்துறையினருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பாலா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். சில ஊர்களுக்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us