vijay tv ma ka pa : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதிலும் விஜய் டிவி மூலம் வகிக்கின்றனர். தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.
Advertisment
குறிப்பாக விஜய் டிவி மா.கா.பா.ஆனந்த். விஜய் டி.வி.யில் காலடி எடுத்து வைத்தாலே சினிமா அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத் தட்டிவிடும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக மா.க.பா. வளர்ந்து வருகிறார்.இவர் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்கள் பணியாற்றி வருகிறார். இவர் நிலைமைக்கு வர பல பிரச்னைகளையும், போராட்டங்களையும் கடந்து வந்துள்ளார்.
இங்கு வருவதற்கு முன் இவர் சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி’ மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார் மாகாபா ஆனந்த்.
Advertisment
Advertisements
பாடல் சிடி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்த மாகாபாவுக்கு, அந்தப் பாடகர்களின் ஷோவையே தொகுத்து வழங்கும் வாய்ப்பை அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் பெற்றுத்தந்தன. சூப்பர் சிங்கருக்குள் இவர் தொகுப்பாளராக வந்தபிறகு பாடல்களுக்காக மட்டுமன்றி இவருடைய பகடிகளுக்காகவும் ஷோ களைகட்டியது.
இவரும் பிரியங்காவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டிகள், கலாய்கள் ஸ்பெஷல் கெஸ்ட்டுகளையும் விட்டு வைப்பதில்லை.பிரியங்காவை மாகாபா கலாய்ப்பதும் அதற்கு நடுவர்கள், போட்டியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கைத்தட்டி ரசிப்பதும் என சூப்பர் சிங்கர் ஷோவே பார்ப்பதற்கு செம்ம ஜாலியாக இருக்கும் இதற்கு மாகாபா தான் முக்கிய காரணம்.
ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று. நமக்கு தெரிந்த விஷயத்தை படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேலையை தான் தொடர்ந்து செய்ய இருக்கிறேன் என்று பெருமைக் கொள்கிறார் அவர்.