Advertisment
Presenting Partner
Desktop GIF

ஸ்மார்ட் மாகாபா ஆனந்த்... cwc புகழுடன் செம்ம ரகளை வீடியோ

Vijay TV Makapa Anand Insta live with cook with comali and mr and mrs chinnathirai stars: விஜய் டிவி ஹிட் ஷோவான குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை டீமுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் மாகாபா கலந்துக் கொண்டார். எப்பொழுதுமே தாடியுடன் இருக்கும் மாகாபா, அதில் தாடி இல்லாமல் செம ஸ்மார்ட்டாக இருந்தார்.

author-image
WebDesk
New Update
ஸ்மார்ட் மாகாபா ஆனந்த்... cwc புகழுடன் செம்ம ரகளை வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை டீமுடன் கலந்துக் கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளர் மாகாபா தான். இவரது நகைச்சுவையான பேச்சு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவுகிறது. முதலில் ஆர்ஜே ஆக பணிபுரிந்த மாகாபா பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுக்குப் பிறகு அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார். தற்போது, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் டிவி ஹிட் ஷோவான குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை டீமுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் மாகாபா கலந்துக் கொண்டார். எப்பொழுதுமே தாடியுடன் இருக்கும் மாகாபா, அதில் தாடி இல்லாமல் செம ஸ்மார்ட்டாக இருந்தார். லைவ்வில் கலந்து கொண்டவர்களும், நிகழ்ச்சியை பார்த்தவர்களும் மாகாபா ஸ்மார்ட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

லைவ்வில் வந்த ராச்மோகன் மாகாபாவிற்கு பத்து வயது குறைந்துவிட்டதாக கூறினார். மேலும் நந்தினியும் மாகாபாவை ஸ்மார்ட்டாக இருப்பதாகக் கூறி ஆச்சரியப்பட்டார்.

லைவ்வில் வந்த அனைவரும் கொரோனாவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குபவர்களைப் பாராட்டினர். மேலும், ஹங்கர் லைவ்க்கு உதவுமாறு மாகாபா கேட்டுக் கொண்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram Video Makapa Ananth Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment