Vijay Tv Manimegalai Priyanka Youtube Stars with high income Tamil News : யூடியூப் தளம் மூலம் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை நன்கு சம்பாதித்துக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை சமீபத்தில் வெளிப்படையாகவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் உறுதிசெய்திருந்தார். பல்கலைக்கழகத்துக்கான பாடங்களை எடுப்பதுபோன்று காணொளிப் பதிவு செய்து, அதனை யூடியூபில் பதிவேற்றுவதன் மூலம் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், இவருக்கே சவால் விடும் வகையில் நம்ம ஊரிலும் சில பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று பார்க்கலாமா!
பல்வேறு பிரபலங்கள், அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் தங்களின் ஷோ மூலம் சம்பாதிப்பதைவிட அதிகமாக யூடியூப் வழியே சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை ஆகியோர் முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும், கட்காரி சொன்ன 4 லட்சத்தையும் தாண்டி யூடியூப் வழியே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரியங்கா மாதம் சுமார் ஏழு லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், மணிமேகலை 6 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். இவ்வளவு சம்பாதிக்கிறார்கள், அப்படி என்ன இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அவர்களின் யூடியூப் தளத்திற்குச் சென்றால், அதில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த வாழ்க்கைமுறை காணொளிகள்தான் அதிகம் உள்ளன.
ஆம், உடல்நிலை சரி இல்லாமல் போனது, சப்பாத்தி எப்படி செய்வது, வீட்டை எப்படி சுத்தம் செய்வது என பொழுதுபோக்கும் அம்சங்கள் நிறைந்திருக்கும் ப்ரியங்காவின் காணொளிகள். ஆனால், அவர்களின் எடிட்டிங் மற்றும் அதற்கேற்ற கவுன்ட்டர்களே அடுத்த கட்டத்திற்கு இவரை நகர்த்தி செல்கிறது. அதிகம் ரசிக்கவும் வைக்கிறது. அப்படியும் இவருடைய காணொளிகள் ரெண்டிங்கில் இடம் பெறாமல் இருக்காது. இதனால், அதிகம் வியூஸ் பெறுகிறது, ட்ரெண்டிங்கில் வருகிறது. நிச்சயம் 7 லட்சத்திற்கும் குறையாமல் இவருக்குப் பணம் கிடைக்கும் என டிஸ்கஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மறுபக்கம் மணிமேகலை தன் கணவருடன் இணைந்து, ஏராளமான காணொளிகளை அப்லோட் செய்துகொண்டிருக்கிறார். வெளியூருக்குச் செல்வது, புதுப்புது மனிதர்களை சந்திப்பது, அவர்களையும் காணொளிகளில் கொண்டு வருவது எனக் கொஞ்சம் வித்தியாச அதே நேரத்தில் ரசிக்கும்படியான காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார் மணிமேகலை. இவருடைய காணொளியும் எப்படியும் ட்ரெண்டிங்கில் வந்துவிடும். அதனால், இவருக்கு 6 லட்சத்திற்கும் அதிகமாகவே யுடியூபிலிருந்து பணம் வரும் என்று கூறுகின்றனர்.
இந்த வரிசையில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா, 'செம்பருத்தி' லக்ஷ்மி, 'கில்லி' ஜெனிஃபர் ஆகியோரும் இடம் படேறுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.