விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியலில் வேதாவாக நடித்த நடிகை அஸ்வதி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் அறிமுகமாகியுள்ளார்.
விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிப்பரப்பான சீரியல் ’விக்ரம் வேதாவின் மோதலும் காதலும்’. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் அஸ்வதி. இவருடன் சமீர், நளினி, கவிதாலயா கிருஷ்ணன், உமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறப்பாக ஓடி வந்த இந்த சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத குழந்தைகள் டாக்டர் கேரக்டரில் நடித்து அனைவரையும் ஈர்த்தார் அஸ்வதி. இதனால் இந்தச் சீரியலுக்குப் பின் எந்த சீரியலில் அஸ்வதி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.
இந்தநிலையில், சன் டிவியில் ஒளிப்பராகி வரும் மலர் சீரியலில் மலராக நடிக்கிறார் அஸ்வதி. மலராக நடித்து வந்த பிரீத்தி சர்மா சீரியலில் இருந்து விலகி விட்டதாக கடந்த வாரத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் இன்று ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியலில் வேதாவாக நடித்த நடிகை அஸ்வதி மலராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதிலும் அஸ்வதி கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மோதலும் காதலும் சீரியல் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அஸ்வதி புதிய சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அவர் மலர் சீரியல் அறிமுகமாக இருப்பதை பலரும் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.
இந்தநிலையில், அஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களும் வேதாவாக ஆதரவு தந்தது போலவே மலராகவும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“