அண்ணன் தங்கை பாசக்கதை : முடிவக்கு வரும் விஜய் டி.வி முக்கிய சீரியல் ; காரணம் இதுதான்!

விஜய் டிவியில் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay Tv Moth

விஜய் டிவி சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் மோதலும் காதலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக அந்த சீரியலின் நாயகனே அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சீரியல்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழில் வெளியான ஹிட் படங்களின் தலைப்புகளை பயன்படுத்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து சீரியல்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்தது. விஜய் டிவி சீரியல்களில் நடித்து பல நட்சத்திரங்கள் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் ஹிட்டாக அமைந்தது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த சீரியலை போலவே அதே சாயலில் தொடங்கப்பட்ட சீரியல் தான் மோதலும் காதலும்.

சமீர் அகமது, அஷ்வதி அஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிகை நளினி, கவிதாலயா கிருஷ்ணன், உமா பத்பநாபன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை, 200-க்கு அதிகமாக எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisment
Advertisements

இது குறித்து ரசிகர் ஒருவர், சீரியலின் நாயகன் சமீரிடம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதலும் காதலும் உண்மையாகவே முடிவக்கு வர உள்ளதா என்று கேட்டபோது, அவர் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு ஆமாம் என்று உறுதி செய்துள்ளார். இதன் மூலம் மோதலும் காதலும் சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது என்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே சமயம் இந்த சீரியலுக்கு பதிலாக பனிவிழும் மலர் வனம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள இந்த சீரியல் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என்று ப்ரமோ மூலம் தெரியவருகிறது. தற்போது பனிவிழும் மலர்வனம் சீரியல் ப்ராமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: