Advertisment

விஜய் டிவி ரசிகர்கள் குஷி... நின்றுபோன சீரியல் மீண்டும் வருகிறது!

Vijay TV Mouna Raagam serial shooting starts, telecast soon: மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது விஜய் டிவியில் பாதியில் நிறுத்தப்பட்ட சூப்பர் சீரியல் மௌன ராகம்; வீடியோ இதோ...

author-image
WebDesk
New Update
விஜய் டிவி ரசிகர்கள் குஷி... நின்றுபோன சீரியல் மீண்டும் வருகிறது!

விஜய் டிவியின் மௌன ராகம் சீரியல் மீண்டும் ஒளிப்பரப்பாக உள்ளது என்ற செய்தியை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் மௌனராகம். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் கிருத்திகா, ராஜேஷ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், ஷமிதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசை மற்றும் உறவுகளை முன்னிறுத்திய இந்த சீரியலின் கதையமைப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இரண்டாவது சீசனில், ரவீணா, ராஜேஷ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் நடித்து வருகின்றனர். முதல் சீசனின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது சீசன் உள்ளது.

தற்போது இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, தமிழக அரசு அமல்படுத்திய ஊரடங்கால், சீரியலின் சூட்டிங் தடைபெற்றது. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மறுபடியும் சீரியலின் சூட்டிங் தொடங்கியது.

இந்த தகவலை மௌனராகம் சீரியலில் நடித்து வரும் வருண் மற்றும் தருண் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டது, விரைவில் வருவோம் என பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து மௌன ராகம் சீரியலின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சீரியல் ஒளிப்பரப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment