/tamil-ie/media/media_files/uploads/2021/04/mr-mrs-chinnathirai.jpg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதில் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2019 ஆண்டு ஒளிப்பரப்பானது. அதில் அறந்தாங்கி நிஷா, தங்கதுரை, சங்கரபாண்டியன், மணிமேகலை உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள், தங்கள் இணையோடு ஜோடியாக கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நீயாநானா கோபிநாத், நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகை விஜயலட்சுமி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பானது. இதில் ராமர், வடிவேல் பாலாஜி, டிஎஸ்கே, சூப்பர் சிங்கர் முருகன், வினோத் பாபு போன்றோர் தங்கள் மனைவியோடு போட்டியாளர்களாக கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் நிஷாவும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நீயாநானா கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி இருந்தனர். கொரோனா ஊரடங்கால் நிகழ்ச்சி சில காலம் தடைப்பட்டது. பின் அரங்குகளுக்குள் மட்டுமே படபிடிப்பு நடத்த அனுமதி, போட்டியாளர்கள் பங்குபெற முடியாத நிலை போன்ற பிரச்சனைகள் இருந்ததால் நிகழ்ச்சி சீக்கிரமே முடிக்கப்பட்டது.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், தற்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி முடிந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் உடன் அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கும் நடுவர்களாக நீயாநானா கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி உள்ளனர். இந்த சீசனில் மைனா நந்தினி, வினோத், சரத் உள்ளிட்ட 12 ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.