vijay tv myna nandhini : தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.
இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவர் 'மைனா' நந்தினி'. டிக்டாக்கில் இவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் இவருக்கென தனி ஆர்மியே உள்ளது.
இதற்கிடையில் கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினியின் முன்னாள் கணவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் நந்தினி குறித்த பேச்சு தான். கார்த்திக் குடும்பத்தினர் மிகப் பெரிய குற்றச்சாட்டுக்களை நந்தினி மீது வைத்தனர். சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். கேலி கிண்டல்கள் அவமானங்களை சந்தித்தார் மைனா.
நந்தினி லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த போது தான் அவரின் கணவர் தற்கொலை செய்தி அவருக்கு தெரியவந்தது. கணவர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அறிந்தும் எந்தவிதமான ரியாக்சனும் காட்டவில்லை என அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களும் நந்தினி மீது வைக்கப்பட்டனர். ஆனால் அவரது வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பிஸியாகிவிட்டார்.
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நந்தினி முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு மட்டும் மாறவில்லை. அவரின் நம்பிக்கையும் அந்த சிரிப்பில் தான் அடங்கி இருந்தது. அதுமட்டுமில்லை தான் ஏற்கும் கதாபாத்திரத்திலும் நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைப்பார்.
நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இப்போது நந்தினி சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று அவரது பெயர், இதனை மைனாவே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் டிவி ஆல்யா மானசா- சஞ்சீவி திருமண வரவேற்பு விழாவில் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.