Vijay TV, Naam Iruvar Namakku Iruvar: கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் விஜய் டிவி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்து இருக்கிறது. அதாவது, இந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற நிகழ்ச்சி மூலம் எதுவும் நின்றுவிடப் போவதில்லை. அது நடந்துக் கொண்டு தான் இருக்கப் போகிறது என்று உணர்த்துகிறார்கள். இவர்கள் சொல்வது போல மக்கள் வெளியில் போவது மட்டும் தான், நின்று இருக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் வேலை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
முதல்வரின் பாராட்டைப் பெற்ற சென்னை ஐ.டி இளைஞர்; அப்படி என்ன செய்தார்?
27, 2020
f
இதே போலத்தான் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கும் லாக்டவுன் இல்லை என்று கூறும் விதமாக ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சீரியல் என்று எடுத்துக்கொண்டு, அதை வீட்டில் இருந்தபடியே தி பெஸ்ட்டாக எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. கடந்த வாரம் முழுக்க மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை இயன்றவரை வீட்டில் இருந்தே ஷூட் செய்து ஒளிபரப்பி வந்தார்கள். இதை வீட்டில் இருந்து தொகுத்து வழங்கினார் மகாபா. மக்கள் எதை எப்படி கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்று நினைத்த விஜய் டிவிக்கு கொஞ்சம் ஏமாற்றம் என்பது போல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஃபெயிலியர் ஷோ தான்.
சன் டிவி ’சந்திர லேகா’ சீரியல்: நம்ம சந்திராவா இது?
செந்தில் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு ஓஹோ என்று சொல்லும்படி ரசிகர்கள் இல்லை என்றாலும், ஓகே ரகத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இப்போது எந்த சீரியலும் இல்லாத நேரத்தில் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை ஒரு எபிசோட் போலவே, இன்று முதல் ஒளிபரப்பத் துவங்குகிறது. இந்த வாரம் முழுதும், ’நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்’ தான். மாயன் தேவியிடம் வழக்கம்போல வழிவதும், அவள் வெடுக்கென்று .பேசுவதும், அத்தை பூஜை அறையில் பூஜை செய்வதும், ஆனந்தி கார்த்திக் பேசுவதும் எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பமே வீட்டில் இருந்து நடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”