NINI 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிற ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் இரட்டை சகோதரர்கள் மாறனும் மாயனும் இனி ஒன்று சேர்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கதையில் இனி மாறனும் மாயனும் எதிரிகளாக மாறுகிறார்கள் என்ற புரோம்போ பெரிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.
விஜய் டிவியில் ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும்‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ (NINI 2) சீரியலில் மாயன் மற்றும் மாறன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர்கள் எதிரிகளாக மாறி இருக்கிறார்கள். இந்த தொடரில் மிர்சி செந்தில் மாயன் மாறன் என இரட்டை சகோதரர்களின் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகளில் மாயன் அம்மாவிடம் பேசிவிடுகிறான். மாயன் தன்னை விட்டுச் சென்ற சாரதா அம்மாவை சந்திக்கவே மாட்டேன் என இருந்த நிலையில், அம்மாவின் டைரியை படித்த பிறகு மனம் நெகிழ்ந்து போன மாயன், சாரதா அம்மா சந்தித்து கண்ணீர் விட்டு உருக்கமாக பேசுகிறான்.
இதற்கு அடுத்து, மாயன் நாச்சியார் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கும் போது மாறன் அதை தடுக்கிறான். அதனால், மாயன் வீட்டுக்குள் வராமல் ஒரு அதிரடி முடிவெடுக்கிறான்.
மாயன் நாச்சியாரும், தனது தங்கைகளும் வேண்டும் எனக் கூறி அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். இதனால், கோபமடையும் மாறன், மாயனிடம் பழி உணர்ச்சியை வெளிப்படுத்துகிறான். இதனால் மாறன் மற்றும் மாயன் இருவரும் எதிரிகளாக மாறுகிறார்கள்.
‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் வருகிற வாரத்துக்கான எபிசோடுகள் பற்றிய புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், மாறன் தனது அண்ணன் மாயனைப் பார்த்து, “மாயா, மாறனை தம்பியாதான நினைச்சிருப்ப இதுவரைக்கும், ஆனால், இனிமேல்தாண்டா நீ அவனை எதிரியா பார்க்கப்போற” என்று பழி உணர்ச்சியுடன் கூறும் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் என்ன இது அண்ணன் தம்பிகள் நேர் எதிரிகளாக மாறிவிட்டார்கள் என்று இது செம ட்விஸ்ட்டா இருக்குதே என்று கூறிவருகிறார்கள்.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் புரோமோவில், மாறன், “இத்தனை வருஷம் உன்னை எப்படா பார்ப்போம் பார்ப்போம்னு ஏங்கி தேடி வந்த அம்மாவுக்கு நீ கொடுக்கும் தண்டனையாடா இது. நம்மள எல்லாம் துறத்தின ஒருத்தங்களுக்காக நீ நின்னு பேசிகிட்டிருக்கியா” என்று மாயனிடம் கோபமாக கேட்கிறான். இதையடுத்து, நாச்சியார், “நீ எங்களுடன் வந்தால், பிரச்சனை பெரிதாகும், பிரிவு நிரந்தரம் ஆகிவிடும். இதை சரிபன்றதுக்கு ஒரே வழி நீ உன் அம்மா உடன் இருப்பது தான் நல்லது” என்று மாயனுக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால், நாச்சியாரின் அறிவுரையைக் கேட்காத மாயன், “அவங்க அம்மானா நீங்க யாருங்க, எனக்கு ரெண்டு அம்மாவும் வேணும், என் தங்கச்சிங்க என் கூடவே இருக்கணும்.. அவ்வளவுதான்.” என்று கூறுகிறான்.
மாயன் பெற்ற அம்மாவை விட்டுவிட்டு நாச்சியார் அவர்களின் மகளுக்காக பரிந்து போவதால் உச்சகட்ட கோபத்துக்கு செலும் மாறன், "மாயா, என்னை இதுவரை தம்பியா தானே பார்த்திருப்ப.. இனிமேல் தான்டா எதிரியா பார்க்க போற” என்று பழி உணர்ச்சியுடன் எச்சரிக்கிறான். இதையடுத்து, மாயன் நாச்சியார் குடும்பத்துடன் காரில் ஏறி கிளம்புகிறான்.
இப்படி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இரட்டை சகோதரர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கலக்குவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாயனும் மாறனும் எதிரிகளாக மாறுவது மிகப் பெரிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது. இருவரும் எதிரிகளாக மாறும் புரோமோ வீடியோவைப் ரசிகர்கள் பலரும் பார்த்து பகிருந்து வருவதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.