தாழம்பூ: திரும்பவும் பாம்பை மையமா வச்ச ஒரு திகில் சீரியல்!

Nagini Serial: ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Nagini Serial: ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thazhampoo serial vijay tv

தாழம்பூ சீரியல்

Thazhampoo Serial: விஜய் டிவி-யில் கடந்த மாதம், ’ஆயுத எழுத்து’ மற்றும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியல் புதிதாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் ’தாழம்பூ’ என்ற பெயரில் மீண்டுமொரு புதிய சீரியலை விரைவில் ஒளிபரப்பவிருக்கிறது விஜய் டிவி.

Advertisment

“உலகைத் தேடி வரும் புதிய உயிரினம்” எனத் தொடங்கும் அதன் ப்ரோமோவில், ஃபேண்டஸி சீரியல்களின் அடிப்படை விஷயமான பாம்பு தான் இதிலும் முக்கியத்துவம் பெறும் என்பது விளங்குகிறது. கதையின் நாயகனாக வருபவரின் உடல் சில நிமிடம் பாம்பாகவும், அடுத்த நொடி மனிதனாகவும் மாறுகிறான். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது, இது இந்தி அல்லது வேறு மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்டதாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை மனதில் வைத்து தான், இந்த முயற்சியை விஜய் டிவி கையாண்டிருக்கிறது போல. தற்போது இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் ‘அதே கண்கள்’ சீரியலின் நேரத்தை மாற்றி விட்டு அந்த நேரத்தில் ‘தாழம்பூ’ ஒளிபரப்பப்படலாம் எனத் தெரிகிறது.

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: