Thazhampoo Serial: விஜய் டிவி-யில் கடந்த மாதம், ’ஆயுத எழுத்து’ மற்றும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியல் புதிதாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் ’தாழம்பூ’ என்ற பெயரில் மீண்டுமொரு புதிய சீரியலை விரைவில் ஒளிபரப்பவிருக்கிறது விஜய் டிவி.
“உலகைத் தேடி வரும் புதிய உயிரினம்” எனத் தொடங்கும் அதன் ப்ரோமோவில், ஃபேண்டஸி சீரியல்களின் அடிப்படை விஷயமான பாம்பு தான் இதிலும் முக்கியத்துவம் பெறும் என்பது விளங்குகிறது. கதையின் நாயகனாக வருபவரின் உடல் சில நிமிடம் பாம்பாகவும், அடுத்த நொடி மனிதனாகவும் மாறுகிறான். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது, இது இந்தி அல்லது வேறு மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்டதாக இருக்கும் என்பது உறுதியாகிறது.
ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை மனதில் வைத்து தான், இந்த முயற்சியை விஜய் டிவி கையாண்டிருக்கிறது போல. தற்போது இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் ‘அதே கண்கள்’ சீரியலின் நேரத்தை மாற்றி விட்டு அந்த நேரத்தில் ‘தாழம்பூ’ ஒளிபரப்பப்படலாம் எனத் தெரிகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijay tv new fantasy serial thazhampoo
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை