விஜய் டிவி ஸ்டார் இயக்குனர் சீரியலில் புதிய பிரபலம்: இவ்ளோ நாள் எங்கய்யா போனீங்க?!

Vijay TV new serial namma veetu ponnu update venkat acts serial again: விஜய் டிவியின் புதிய சீரியல் நம்ம வீட்டு பொண்ணு; மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் நடிகர் வெங்கட்

விஜய் டிவியின் புதிய சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளார் நடிகர் வெங்கட்.

விஜய் டிவியில் புதிதாக நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த சீரியலை பாரதிகண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியல்களை இயக்கிய, விஜய் டிவியின் முக்கிய இயக்குனரான பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இதில் விஜே பப்பு மற்றும் ஷப்னம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷப்னம் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்.

இந்த சீரியலில், தற்போது முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் 90’ களில் சின்னத்திரையில் நடித்து வந்த வெங்கட் தான். அப்போது பல சீரியல்களில் நடித்து வந்த வெங்கட், பின்னர் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நன்கு பிரபலமான வெங்கட், தற்போது மீண்டும் நடிக்க வந்தாலும், அவரை ரசிகர்கள் அடையாளம் காண்பது கடினம் தான்.

நடிகர் வெங்கட் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷப்னம், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எனது புதிய சீரியல் குழு, எனது சீரியல் பெயர் நம்ம வீட்டு பொண்ணு, பிரவீன் பென்னட் சாருக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் ஏற்கனவே பிரபலமான நடிகர் என்பதால் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியின் ஸ்டார் இயக்குனரான பிரவீன் பென்னட் இயக்குவதால், இந்த சீரியல் ஒளிப்பரப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv new serial namma veetu ponnu update venkat

Next Story
பாக்யலட்சுமி சீரியல் ராதிகா திடீர் விலகல்: ரசிகர்கள் ஷாக்Baakiyalakshmi Serial Bigg Boss Reshma replace Jenifer
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com