scorecardresearch

ஹீரோ மீது சாம்பார் கொட்டிய ராஜா ராணி நடிகை… விஜய் டிவி புது சீரியல் ப்ரோமோ வந்தாச்சு!

Vijay TV new serial Namma vettu ponnu promo: விஜய் டிவி புது சீரியல் நம்ம வீட்டு பொண்ணு ப்ரோமோ; ஹீரோ மீது சாம்பார் கொட்டிய ஹீரோயின்; மோதல் காதலாகுமா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய சீரியலான ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது. சமீப காலமாக விஜய் டிவி சீரியல்களும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன. விஜய் டிவியும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கும் அளித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக, விஜய் டிவி புது சீரியலை களமிறக்குகிறது. நம்ம வீட்டு பொண்ணு என்ற அந்த சீரியல், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரங்களில், சுர்ஜித் குமார் மற்றும் அஸ்வினி ஆனந்திதா நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜா ராணி சீரியலில் வடிவு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஷப்னம், அருணா சுதாகர், அம்ருதா, நித்தியா ரவிந்தர், வைஷாலி தணிகா, சந்தியா விஜே உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சீரியல்களுக்கு எப்போதுமே குடும்பங்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். சமீபகாலமாக, திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களுக்கு மெனக்கெடல் இருந்து வருகிறது. இதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தற்போது விஜய் டிவி நம்ம வீட்டு பொண்ணு சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், ஹீரோவோட குடும்பத்தில் பூஜை நடக்கிறது. அங்கு வரும் ஹீரோயின், இந்த பழைய சம்பிரதாயங்களை நக்கலடிக்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக ஹீரோ மீது சாம்பாரைக் கொட்டி விடுகிறார் ஹீரோயின். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் மோதலால், இப்படி ஒருத்தனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவெடுக்கிறாள் ஹீரோயின். ஆனால் இவர்களது ஜோடி பொருத்ததை குடும்பத்தினர் ரசிக்கின்றனர். இப்படியான மோதல், காதல் ஆகப்போகிறதா? அல்லது இவர்கள் எலியும் பூனையுமாக இருக்கப் போகிறார்களா என்பது போகப் போக தெரியும்.

இப்படி திரைப்பட டிரைலர் போல் வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சீரியல் ஒளிப்பரப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv new serial namma vettu ponnu promo