படிப்பு ஏறாத ஹீரோயின்… படிக்காத ஹீரோ! விஜய் டிவி புது சீரியல் தேதி அறிவிப்பு

Vijay TV new serial Thamizhum Saraswathiyum telecast starts july 12 : விஜய் டிவியின் புதிய சீரியல் தமிழும் சரஸ்வதியும் ; ஜூலை 12 முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

விஜய் டிவியின் புதிய சீரியல் ஒளிப்பரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. புதுப்புது கதையம்சம் கொண்ட சீரியல்களை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் தற்போது, ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்த சீரியலின் ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த வித்தியாசமான ப்ரோமோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், சீரியல் வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக தீபக் நடிக்கிறார். ஹீரோயினாக நக்‌ஷத்திரா நடிக்கிறார். மேலும் இதில் தெய்வமகள் சீரியலில் நடித்த ரேகா கிருஷ்ணப்பா மற்றும் மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படிக்காத ஹீரோ தமிழ், தனக்கு படித்த பெண் மனைவியாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சரஸ்வதி என்று பெயர் வைத்திருந்தாலும், சுத்தமாக படிப்பு ஏறாத ஹீரோயின், தமிழை கோவிலில் சந்திக்கிறார். அவர்களுக்குள் ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை இருக்கும் என்று ப்ரோமோவை பார்க்கும்போது தெரிகிறது.

காமெடி கலந்த காதல் கதையாக இந்த சீரியல் இருக்கும் என ப்ரோமோ மூலம் தெரிவதால், சீரியல் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv new serial thamizhum saraswathiyum telecast starts july 12

Next Story
சன் டிவியில் சங்கமம்: சுந்தரியை தாக்கவரும் ரவுடிகள்… அடிச்சு தூள் பண்ணும் துளசி!sun TV serial Tamil News: sundari and vanathaipola serials will be on aired as maha sangamam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com