Vijay TV Serials : விஜய் டிவியிலும் சீரியல்கள், வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளன. மாலை 6 மணியில் இருந்தே மாலை சீரியல்கள், பகலில் ஒன்றிரண்டு புது சீரியல், இரண்டாம் ஒளிபரப்பு சீரியல்கள் என்று வரிசையாக சீரியல்கள் ஆதிக்கம் துவங்கி உள்ளது. ஆயுத எழுத்து சீரியல் மாலை 6 மணிக்கு ஆரம்பிப்பதில் இருந்து இரவு 10 மணி வரை சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து விஜய் டிவியும் பெரும்பாலான நேரங்களில் சீரியல் வசம் மக்களை கட்டிப்போடத் துவங்கி உள்ளது.
சன் டிவியில் காலை 9:30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3:30 மணிவரை சீரியல்கள் ஆதிக்கம்.. அடுத்து மாலை 6:30 மணிக்கு ஆரம்பித்து இரவு 10:30 மணி வரை சீரியல்கள் ஆதிக்கம் உள்ளது. சன் டிவியின் முழு கவனமும் சீரியல் வசமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியும் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல்களை புகுத்தி வருகிறது.
Advertisment
Advertisements
விஜய் டிவியில் வருகிற திங்கள் முதல் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்பாக உள்ளது. மற்றும் ஒரு புது சீரியலாக செந்தூரப்பூவே என்று ஒரு சீரியல்.. இதை ஒளிபரப்பும் நாள், நேரத்தை இன்னும் விஜய் டிவி அறிவிக்கவில்லை. ஆக மொத்தம் சீரியல்களால் மக்களை கட்டிப்போடும் முயற்சியில் விஜய் டிவியும் உள்ளது.
விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதும் ஒரு குறையை வைத்து துவங்கும் கான்செப்டாக மட்டுமே இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளை வீடுகளில் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் எனும் கான்செப்டை மிக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பாக்கியலட்சுமி சீரியலை ஒளிபரப்ப இருக்கும் விஜய் டிவி... ஆரம்பத்தில் கான்செப்டை நூல் பிடித்த மாதிரி பிடித்து பயணித்து, பின்னர் கதை வேறு திசைக்கும் பயணிக்கும்படி கொண்டு செல்லும்.
குடும்பத்த தலைவி ஃபீலிங்ஸ்.. தனது பிறந்த நாளையும் மறந்து குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழும் ஒரு குடும்பத்த தலைவியின் கதை. இது இந்த காலத்திலும் தொடர்கிறது என்று பாக்கியலட்சுமி சீரியலில் பார்க்கும்போது அவரவர் இல்லத்தரசிகள் நினைவுக்கு வருவார்கள் என்று கணித்து இந்த சீரியலை ஷூட் செய்து இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு பழையதை அசைபோடுவது என்பது மிகவும் பிடிக்கும். அந்த மாதிரி மைண்ட் செட் உள்ளவர்களை குறிவைத்து பயணிக்க இருக்கும் பாக்கியலட்சுமி பெரும்பாலான மக்களின் ஆதரவை பெறுவாள் என்று விஜய் டிவி நம்புகிறது.