Advertisment

’ஆபிஸ்’ மதுமிலாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

author-image
WebDesk
New Update
Office Madhumila

Office Madhumila

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'ஆபிஸ்’ சீரியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகளையும், அங்கு உருவாகும் காதலையும் இதில் இயல்பாகக் காட்டியிருப்பார்கள்.

Advertisment

தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலின் ஹீரோ கார்த்திக் தான் ஆபிஸிலும் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். இவர்களின் நண்பர்களாக விஷ்ணு - மதுமிலா ஜோடி நடித்திருந்தது.

யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட மதுமிலா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். அதன் பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் ஆபிஸ் தொடரில் நடித்தார். பிறகு தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படத்தைப் பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ந்து போயிருக்கிறார்கள். உடல் எடை சற்று அதிகரித்திருப்பது தான் அதற்குக் காரணம். அதோடு, யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மதுமிலா, யோகா சமபந்தமான படங்களையும் அதிகளவில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment