ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ஆபிஸ் சீரியல்…மீண்டும் விஜய் டிவி வருவாரா கார்த்தி!

திருமணத்திற்கு பின்னர் நடிகர் கார்த்திக் சினிமாவில் நுழைந்தார்

vijay tv office serial
vijay tv office serial

vijay tv office serial : விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பின்னர்  கார்த்திக் ஆபிஸ் தொடரிலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘செம்பருத்தி’ என்ற சீரியலில் ஹீரோவாக ஆதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் கார்த்திக். இந்த சீரியலில் இவரின் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் செம்ம வைரல்.

90 கிட்ஸ் ஆபிஸ் சீரியலை அவ்வளவு எளிதாக மறக்கவில்லை. கார்த்திக் – ராஜி ஜோடி என்றால் அப்படியொரு வைரல். இவர்களின் புகைப்படங்கள் தான் எல்லா ஃபோன்களிலும் டிஸ்ப்ளேவாக இருக்கும். ஆபிஸ் ரிங்டோன் கூட ஒருகாலத்தில் அப்படி ஒரு கிரேஸ்.

ஜோடி நிகழ்ச்சிக்கு பின்னர் மூன்று வருடங்களாக சீரியல் வாய்ப்பு இல்லாமல் இருந்தார் கார்த்திக்.  அதற்கு முக்கிய காரணமே இவரது திருமண வாழ்க்கை தான். கார்த்திக் கல்லூரி படிக்கும் போதே யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் நடிகர் கார்த்திக் சினிமாவில் நுழைந்தார்.

ஆனால் சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு பெரிய திரையில்  அவருக்கு  கிடைக்கவில்லை. திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகளிலேயே கார்த்திக் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்தார். இதன் பின்பு தான் செம்பருத்தி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சமீபத்தில் நடந்த ஜீ குடும்ப விருதுகள் 2019 -ல் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக கார்த்திக்கு விருது வழங்கப்பட்டது.

இருந்த போதும், கார்த்திக் ரசிகர்களுக்கு அவரை மீண்டும் ஆபிஸ் சீரியலில் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதை சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவு செய்துள்ளனர். கடந்த வருடம் கார்த்திக் தனது பிறந்த நாளை ஒட்டு மொத்த செம்பருத்தி நட்சத்திரங்களுடன் கொண்டாடினார்.

அதுமட்டுமில்லை செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா உடன் கார்த்திக் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. எப்படி இருந்தாலும் மீண்டும் கார்த்திக்கை விஜய் டிவியில் பார்க்க வேண்டும் என்பதே அவரின் தீவிர ரசிகர்களின் கோரிக்கை. குறிப்பாக பெண் ரசிகைகள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv office serial office serial karthick office serial vijay tv office karthik vijay tv office raji karthik hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express