தமிழ் சீரியல் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட தொடராக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இருந்து வருகிறது. அடுத்து என்ன திருப்பங்கள் என ரசிகர்களை அனுதினமும் காத்திருப்பில் ஆழ்த்தும் பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்கள் யூகிக்காத முடியாத திருப்பம், எதிர்வரும் எபிசோடுகளில் காத்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ஒரு குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதைகளம் நகர்கிறது. கடைசி தம்பி மட்டும் கல்லூரி மாணவனாக வலம் வர, மீது 3 அண்ணன்மார்களும் திருமணமாகி பாண்டியன் ஸ்டோர்ஸை வழிநடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதைக்களம் சற்றே சுவாரஸ்யங்கள் கூடி, நான்கு சகோதரர்களும் சிறுவர்களாக வலம் வரும் பிளாஷ்பேக் சீன்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் காத்திருக்கிறது.
பிளாஷ்பேக் சீன்களுக்கு, அண்ணன் தம்பிகள் தோற்றத்தை ஒத்த சிறுவர்களை கண்டுபிடித்து, தொடர் ஒளிப்பதிவாகி வருகிறது. அதன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil