Pandian Stores: லட்சுமி அம்மா மரண காட்சிக்கு இப்படி எல்லாமா பரிகாரம் செஞ்சாங்க?

Vijay TV Pandian Stores compensation after death scene to sheela viral photo: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறப்பது போல் நடித்த லக்ஷ்மி அம்மாவுக்கு பரிகாரம் செய்யப்பட்டதாக தகவல்; புகைப்படம் இதோ…

Vijay TV Pandian Stores compensation after death scene to sheela viral photo: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறப்பது போல் நடித்த லக்ஷ்மி அம்மாவுக்கு பரிகாரம் செய்யப்பட்டதாக தகவல்; புகைப்படம் இதோ…

author-image
WebDesk
New Update
Pandian Stores: லட்சுமி அம்மா மரண காட்சிக்கு இப்படி எல்லாமா பரிகாரம் செஞ்சாங்க?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறப்பது போல் நடித்த லக்‌ஷ்மி அம்மாவுக்கு பரிகாரம் செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், குமரன், வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் லக்‌ஷ்மி அம்மாவாக நடிகர் விக்ராந்தின் தாயார் ஷீலா நடித்திருந்தார்.

இந்தநிலையில் லக்‌ஷ்மி அம்மா கேரக்டர் இறப்பது போன்று கதை அமைக்கப்பட்டது. இதற்கான காட்சிகள் சில நாட்களுக்கு முன் ஒளிப்பரப்பப்பட்டன. இந்த நிலையில் இறப்பதுபோல் காட்சிகள் எடுக்கப்பட்ட உடன் அந்த காட்சியில் நடித்த ஷீலாவிற்கு உடனடியாக பரிகாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக இறந்தது போன்று நடித்தால், அவர்களுக்கு எதிரில் உடனடியாக சிரித்த முகத்துடன் ஒருவர், அந்த காட்சிகளுக்கு எதிரில் இருக்க வேண்டுமாம். இதுபோல செய்வது ஒரு பரிகாரமாக கருதப்படுகிறது,

மேலும், இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்தவுடன் நடித்தவருக்கு பூசணிக்காய், எலுமிச்சம் பழம் மற்றும் தேங்காய் கொண்டு கற்பூரம் கொளுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகுதான் வீட்டிற்கு அனுப்புவார்களாம்.

Advertisment
Advertisements

அதே போன்று நடிகை ஷீலாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் அனைத்து விஷயங்களையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: