இப்போ சித்ரா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் படைத்த சாதனை

vijay TV pandian Stores Hindi Language Adaptation : இந்தியிலும் இந்த தொடருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபபடுகிறது.

Suicide or Murder Vj Chitra Pandian Stores Mullai Sudden Death Cntroversies Fans shocked Tamil news
Chitra Pandian Stores Mullai

vijay TV pandian Stores Hindi Language Adaptation: பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தெலுங்கு மொழியில் வதினம்மா என்ற பெயரிலும் , கன்னட மொழியில் வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் , மராத்தி மொழியில் சஹ குடும்ப் சஹ பரிவார் என்ற பெயரிலும் , பெங்காலி மொழியில் பாகலோக்கி என்ற பெயரிலும் , மலையாள மொழியில் சாந்த்வனம் என்ற பெயர்லிலும் மறுதயாரிப்பில் ஒளிபரப்பபப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் மளிகை கடையை நடத்திவரும் நடத்தி வரும் குடும்பத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த தொடரில் முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் 9-ந் தேதி உயிர் இழந்தார். இவரது மரணம் தற்கொலை என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட் சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில், சரவணன் மீனாட்சி 2 (2014-2016), சரவணன் மீனாட்சி 3 (2018), ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், வேலுநாச்சி என்ற தொடரில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ஆனார்.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்தி மொழியில் மறுதயாரிப்பு செய்யப்படுகிறது. இந்தியிலும், இதற்கு பாண்டியன் ஸ்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே,  இந்தியிலும் இந்த தொடருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபபடுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandian stores hindi language adaptations as pandya store

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express