பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் மீனா! நிஜத்திலும் நல்ல மருமகளாக பெயர் எடுக்க எடுத்த ரிஸ்க் இதுதான்.

இப்ப மீனா சீரியலில் ரொம்ப பிஸி

இப்ப மீனா சீரியலில் ரொம்ப பிஸி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay tv pandian stores meena

vijay tv pandian stores meena

vijay tv pandian stores meena : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பார்ப்பவர்களை கோபப் படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஹேமா ராஜ் குமார் என்கிற மீனா. ஆரம்பத்தில் குடும்பத்தை பிரிக்க வந்த வில்லி போலவே மீனாவின் கதாபாத்திரம் இருந்தாலும் இப்போது மீனா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செல்ல மருமகள்.

Advertisment

மீனாவுக்கு சமூகவலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இவரின் டப் மேஷ் வீடியோக்களும் ட்ரெண்டடித்து வருகிறது. ஹோம்லி லுக்கில் வலம் வரும் மீனா புடவையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் அணியும் புடவைகள் எல்லாமே இவரின் தனிப்பட்ட கலெக்‌ஷன்கள் தான்.

publive-image

நன்றாக தமிழ் பேச தெரிந்த சீரியல் நடிகை என்பதால் மீனாவை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். திருமணமான மீனா, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இவரின் மாமியார் தான் இவருக்கு மிகப் பெரிய பலமாம்.

Advertisment
Advertisements

மீனா கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடிகை கவிதா தான் நடித்து வந்தார். பின்பு அவருக்கு அந்த நேரத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நேரம் கிடைத்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சீரியலை விட்டு பாதியில் வெளியேறினார். அந்த நேரம் தான் மீனாவுக்கு லக் அடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளானர் மீனா.

MCA முடித்துவிட்டு திரை துறைக்கு வந்த மீனா நிறைய ஃபோட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் கொண்டவர். டஸ்கின் ஸ்கீனில் வித விதமான மேக்கப் பற்றியும் விளக்கி ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

publive-image

பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு வந்த போது முதலில் அவர் தயங்கினாராம், காரணம், அவரின் மாமியார் ஏதாவது சொல்வாரோ என்ற பயம் தான். ஆனால் மீனாவின் மாமியாரோ ”நீ தாராளமாக நடி குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று துணை நிற்க இப்ப மீனா சீரியலில் ரொம்ப பிஸி.

publive-image

பாயும் புலி, ஆறாது சினம், சவரகத்தி போன்ற பெரிய திரையிலும் மீனா முகம் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: