பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இவர்தான் முல்லை; வைரல் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா, சித்ராவின் முல்லை கேரக்டரில் நடிக்க உள்ள நடிகை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

pandian stores mullai new mullai kavya
pandian stores mullai new mullai kavya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக அவருடைய முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை யார் என்று வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும். இந்த தொடரில், முல்லை – கதிர் ஜோடி கதாபாத்திரங்களுக்கு எல்லா வீடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அதிலும், முல்லையாக நடித்த சித்ரா தனது அழகான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவராக இருந்தார்.

இந்த சூழலில், நடிகை சித்ரா அண்மையில் சென்னை பூந்தமல்லி அருகே ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இந்த அகால மரணம் சினிமா துறையினரை உலுக்கியது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரா மரணம் அடைந்ததால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா அறிவுமணி ஒப்பந்தமானார். இது குறித்து சீரியல் தயாரிப்பு குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கேரக்டருக்கு அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீவித்யா சில புகைப்படங்களை பதிவிட்டு அதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள ஸ்ரீவித்யா, “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காவ்யாதான் இனி முல்லையாக நடிக்கிறார். இது அவருக்கு ஒரு சவாலான விஷயம்தான். ரசிகர்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandian stores seral actress kavya arivumani acting in mullai character viral video

Next Story
அர்ச்சனாவை கலாய்ங்க… மகள் என்ன பாவம் செய்தார்?Netizens are after Bigg Boss Archanas Daughter Zara Instagram Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express