பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்; புதுசா வர்றது யார் தெரியுமா?

Vijay TV Pandian stores serial actress change : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்; புதிதாக வருகிறார் மற்றொரு விஜய் டிவி நடிகை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் தீபிகாவுக்கு பதில் மற்றொரு விஜய் டிவி நடிகை நடிக்கவுள்ளார்.

அண்ணன் – தம்பி உறவுகளை மையமாக வைத்து, விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். டிஆர்பி ரேட்டிங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சீரியலில் தற்போது அண்ணன்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்ட கண்ணன், ஐஸ்வர்யாவுடன் எப்படி வாழ்கிறான் என்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் மாற்றப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாவாக இதுவரை நடித்து வந்த தீபிகா, மாற்றப்பட்டு மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சாய் காயத்ரி விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமானவர். இவர், ஈரமான ரோஜாவே சீரியலிலும் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandian stores serial actress change

Next Story
5 மாத பிரக்னன்ட்… தைரியமான முடிவு… பாராட்டு மழையில் நீலிமாNeelima Rani Tamil News: actress neelima takes 1st dose of covid vaccine 5th month pregnancy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com