பாண்டியன் ஸ்டோர்ஸ்: தனம் - மூர்த்தி கல்யாணம் ஃபிளாஷ் பேக்; நடிகை கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 15 வருஷத்துக்கு முன்னாடி தனம் - மூர்த்தி கல்யாணம் எப்படி நடந்தது என்ற ஃபிளாஷ் பேக் காட்சிகளை ஏப்ரல் 29, 30 ஆகிய நாட்களில் கண்டு களியுங்கள் என்று நடிகை கம்பம் மீனா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 15 வருஷத்துக்கு முன்னாடி தனம் - மூர்த்தி கல்யாணம் எப்படி நடந்தது என்ற ஃபிளாஷ் பேக் காட்சிகளை ஏப்ரல் 29, 30 ஆகிய நாட்களில் கண்டு களியுங்கள் என்று நடிகை கம்பம் மீனா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான தனம் - மூர்த்தி இருவருக்கும் 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கல்யாணம் பற்றிய ஃபிளாஷ் பேக் காட்சிகளை படமாக்கும்போது, நடிகை கம்பம் மீனா படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய நவீன காலத்தில் அனைவரும் தனிக்குடும்பங்களாக சுறுங்கிவிட்ட சூழலில் ஒரு கூட்டுக்குடும்பத்தின் கதை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 4 பேர் சகோதரர்களாக உள்ள ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடைபெறும் நல்லது கெட்டது என எல்லா நிகழ்வுகளையும் மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல பார்வையாளர்களை நெருக்கமாக உணரவைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் கூட்டுக் குடும்பத்தின் அச்சாணியாக இருக்கும் அந்த குடும்பத்தின் மூத்த மகனும் எல்லோருக்கும் அண்ணனுமான மூர்த்தி கதாபாத்திரமும் மூர்த்தியின் மனைவி தனமும்தான் முக்கிய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு நாளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுவாரஸ்யமான நிகழ்வுகளுன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 15 வருஷத்துக்கு முன்னாடி தனம் - மூர்த்தி கல்யாணம் எப்படி நடந்தது என்பதைக் காட்டும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
15 வருஷத்துக்கு முன்னாடி தனம் - மூர்த்தி கல்யாணம் எப்படி நடந்தது என்ற ஃபிளாஷ் பேக் காட்சிகளை ஏப்ரல் 29, 30 ஆகிய நாட்களில் கண்டு களியுங்கள் என்று அந்த சீரியலில் நடித்து வரும் நடிகை கம்பம் மீனா படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
நடிகை கம்பம் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் தனம் மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் எடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”