விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடியப் போகிறதா என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா பதிலளித்துள்ளார்.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் கோலோச்சுவது சீரியல்கள்தான். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. தமிழ்ச்சமூகம் பெரும்பாலும் கூட்டுக்குடும்ப சூழலில் இருந்து வெளியேறிவிட்ட சூழலில், கூட்டுக் குடும்பத்தின் கதையாக அமைந்துள்ள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என மளிகை கடை நடத்திவரும் 4 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசிப்பதும் அவர்களுக்கு இடையேயான அன்பையும் பிரச்னைகளையும் ஒரு நடுத்தரக் குடும்ப பின்னணியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை நடக்கிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், 4 சகோதரர்களில் கடைசி தம்பி கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஆனால், ஐஸ்வர்யாவுக்கும் பிரசாந்த்துக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் கண்ணன் தனது காதல் விவகாரம் பற்றி அண்ணன்களிடம் சொல்ல முயற்சி செய்கிறான். ஆனால், எப்படி சொல்வது என்று பயத்தில் இருக்கிறான். கண்ணன் தனது காதல் விவகாரம் பற்றி அண்ணன்களிடம் சொல்லி அவர்கள் உதவியுடன் ஐஸ்வர்யாவை கரம் பிடிப்பானா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த சூழலில்தான், அக்டோபர் 2018 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிவடைய உள்ளதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டது. அதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு படக்குழுவினர் சீக்கிரம் ‘எண்ட் கார்டு’ போடப் போகிறார்களா என்று ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அப்படி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமா ராஜ்குமார் பதிலளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விரைவில் முடிக்கப் போகிறார்களா என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஹேமா, “டீம் என்னிடம் அப்படி எதுவம் சொல்லவில்லை. அதனால் நோ” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்ட் கார்டு இப்போது இல்லை என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"