Vijay TV Pandian Stores Serial Kaaviya Arivumani Quit on Serial விஜய் டி.வி பிரபல சீரியலில் முக்கிய நடிகை விலகல்? இன்ஸ்டாவில் ஷாக் பதிவு | Indian Express Tamil

விஜய் டி.வி பிரபல சீரியலில் முக்கிய நடிகை விலகல்? இன்ஸ்டாவில் ஷாக் பதிவு

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தெலுங்கு கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

விஜய் டி.வி பிரபல சீரியலில் முக்கிய நடிகை விலகல்? இன்ஸ்டாவில் ஷாக் பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய பிரபல் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் ஒளிபரப்புவதில் தனி இடம் பெற்றுள்ள விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 சகோதரர்களின் ஒற்றுமை கூட்டுக்குடும்பம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல தேவைகளை வலியுறுத்தும் இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட், காவியா, ஹேமா, சரவண விக்ரம், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தெலுங்கு கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து தற்போது கதிர் முல்லை தம்பதி பிரிந்து சென்று தனியாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஹோட்டல் தொழிலில் அதிக லாபம் இல்லை என்பதால் அடுத்து இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே முல்லை கேரக்டரில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா மரணத்தை தொடர்ந்து காவியா அந்த கேரக்டரில் நடிக்க வந்தார்.

ஆனால் தற்போது அவரும் சீரியலில் இருந்து விலக உள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டாலின், சுஜிதா சரவணன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் மிஸ்யூ ஆல் என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் காவிய சீரியலை விட்டு விலகுகிறாரா அல்லது சீரியலில் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக இருக்கிறாரே அதனால் இப்படி பதிவிட்டுள்ளாரா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு எதுவும் அறிவிக்காத நிலையில், காவியா தற்போது படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv pandian stores serial kaaviya arivumani quit on serial