Advertisment

இது முடிவு அல்ல... பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி வாரம் உருக்கமான ப்ரமோ வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி ப்ரமோ; இது முடிவல்ல… இன்னும் ஒரு கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம்

author-image
WebDesk
New Update
ps5

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி ப்ரமோ; இது முடிவல்ல… இன்னும் ஒரு கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம்

இது முடிவல்ல, இன்னும் ஒரு அழகான கூட்டுக் குடும்ப கதையை நோக்கிய தொடக்கம் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைசி எபிசோடு ப்ரமோ வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். 1500 எபிசோடுகளைத் தாண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த வந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம்பிடிக்க காரணமே அதன் யதார்த்த கதைக்களம் தான். அண்ணன் - தம்பிகளின் பாசப் போராட்டத்தை காட்டும் விதமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும்.

இந்த சீரியலில் மூத்த அண்ணாக ஸ்டான்லி நடித்தார். அவருக்கு ஜோடியாக சுஜிதா தனுஷ் நடித்தார். இவர்களுடன் வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா, தீபிகா, சரவணவிக்ரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் முல்லையாக நடித்த சித்ரா திடீரென மரணமடைந்ததையடுத்து, காவியா அறிவுமணி அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புகள் காரணமாக காவியா சீரியலை விட்டு விலகியதையடுத்து, லாவண்யா அந்த கேரக்டரில் நடித்தார். பின்னர் தீபிகா சீரியலில் இருந்து சில காலம் விலகியபோது, அந்தக் கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்தார்.

இந்தநிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இறுதி எபிசோடுகளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரோமோவில், எங்க குடும்பத்தோட வாழ்க்கை, குடும்பம்னா இப்படித்தான் இருக்கனும்னு ஊரே சொல்ற அளவுக்கு சிறப்பாக இருந்தது என்று குடும்பத்தினர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களின் இல்லங்களிலும் உள்ள கொள்ளை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நிறைவு வார உணர்ச்சிகரமான பகுதியை காணத்தவறாதீர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இது முடிவல்ல, இன்னும் ஒரு அழகான கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம் என்றும் உணர்ச்சிபூர்வமாக ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தந்தை – மகன்கள் உறவை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pandian Stores Serial Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment