பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் மீனா திடீரென நல்ல பெண்ணாக மாறியிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மீனா நீங்க நல்லவங்களா... கெட்டவங்களா? என்று கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியலாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரமாக நடித்து வந்த சித்ரா இறந்துவிட்டதால், அவருக்கு பதிலாக காவியா, முல்லையாக ஒரு அறிமுகம் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் தலை மருமகளான தனம் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், அதை மீனா எப்படி ஏற்றுக் கொள்வார் என்று தான் பல்வேறு ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று வெளியிட்டிருக்கும் ப்ரமோவில் மீனா தீடீரென மாறி இருக்கிறார்.
தற்போது இந்த சீரியலில் தனம் மாசமாக இருக்கும் சீனில் மீனா நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். இவர் கர்ப்பமாக இருப்பதை யாருக்கும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே போட்டு வைத்து கவலையும் சந்தோஷமும் பட்டு கொண்டிருந்ததால் மீனா அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார்.
இதனைத் தொடர்ந்து, மீனா இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகுதான் தனம் தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லி இருக்கிறார். சீரியலில் குடும்பத்தினர் அனைவருமே சந்தோஷமாக இருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் தங்கள் வீட்டில் ஒருவர் கர்ப்பமாக ஆகியிருப்பது போல மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மீனாவிடம் சொல்வதற்காக கண்ணன் மீனாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை கொஞ்சி உனக்கு ஒரு குட்டி பாப்பா விளையாட வரப்போகிறது என்று மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். அதற்கு, மீனா கோபத்தோடு என்ன முல்லை மாசமாக இருக்கிறாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு இல்லை தனம் அண்ணி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னதும் சந்தோஷமடைந்த மீனா தனத்தை பார்ப்பதற்காக குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கை மீனாவே ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு கண்ணனுடன் பைக்கில் வருகிறார்.
மீனா வந்ததைப் பார்த்த தனம் முதல் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ரொம்ப சந்தோஷம் அடைகின்றனர். எப்போதும் வெடுக்கென்ற பேச்சு சண்டை என்று இருக்கும் மீனா தற்போது தனம் மாசமாக இருப்பதைப் அறிந்து சந்தோஷமாக பார்க்க வந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் இந்த மீண்டா நல்லவங்களா... கெட்டவங்களா? என்று கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"