பாண்டியன் ஸ்டோர்ஸ்: இந்த முக்கிய நடிகை இனி கிடையாதா? சொல்லுங்க ரைட்டர் சார்!

இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர், “நீங்க ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வருவதில்லை மேடம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்ரீவித்யா, “இதை நீங்க ரைட்டரதான் கேட்கனும். எனக்கு சீனே எழுதல” என்று பதிலளித்துள்ளார்.

vijay TV, pandian store actress srividhya, pandian stores serial, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ், நடிகை ஸ்ரீவித்யா, srividhya, pyiya thambi, tamil tv serial

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரீவித்யா சீரியலில் பல நாட்களாக காட்டப்படாத நிலையில், நடிகை ஸ்ரீவித்யா சீரியலில் அவர் இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறபோது உறவுகளுக்கு இடையே நடக்கிற அன்பான நிகழ்ச்சிகள், சண்டைகள், ஒற்றுமை ஆகியவற்றுடன் பார்வையாளர்களை நெருக்கமாக உணரவை வைக்கும் வகையில் கதை அமைந்துள்ளது.

தமிழ்ச்சமூகம் தனிக்குடும்பங்களாக பிரிந்துபோய்விட்ட சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், கூட்டுக் குடும்பத்தின் நல்ல நிகழ்வுகளைக் காட்டின் அவர்களை கூட்டுக் குடும்பத்துக்காக ஏங்க வைத்து வருகிறது.

பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில், சத்யமூர்த்தியின் பூர்வீக இடத்துக்கான கோர்ட் கேஸுக்காக சென்றிருக்கிறார். அதன் மதிப்பு பலகோடிகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இன்றைய எபிசோடில் நீதிமன்ற தீர்ப்பு சத்யமூர்த்திக்கு சாதகமாக வரவே வாய்ப்புள்ளது என்ற அளவில் சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை ஒரு கூட்டுக் குடும்பத்தைப் பற்றியது என்பதால் சீரியலில் வரும் சத்யமூர்த்தி, தனம், ஜீவா, மீனா, கதிர், முல்லை, கண்ணன், ஐஸ்வர்யா என கதாபாத்திரங்கள் அனைவரும் ஒவ்வொரு எபிசோடிலும் கூடுமானவரை காட்டப்படுகிறார்கள். ஆனால், மீனாவுக்கு அம்மா கதாபாத்திரம் மட்டும் சில நாட்களாக காட்டப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கிறார். அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அம்மாவாக நடித்துவரும் ஸ்ரீவித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீவித்யா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்வையிட்ட இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர், “நீங்க ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வருவதில்லை மேடம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்ரீவித்யா, “இதை நீங்க ரைட்டரதான் கேட்கனும். எனக்கு சீனே எழுதல” என்று பதிலளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா இனி இருக்கிறாரா? இல்லையா சொல்லுங்க ரைட்டர் சார் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandian stores serial meena mother actres srividhya says ask writer about her character

Next Story
ஷாக் நியூஸ்… சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவுக்கு கொரோனாSundari Gabriella Sellus Motivation Beauty Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com