/tamil-ie/media/media_files/uploads/2021/07/Pandian-Stores.jpg)
Pandian Stores Serial Today Episode : நிச்சயத்தார்த்ததை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் குன்னக்குடி திரும்பி வருகின்றனர். இவர்களை பார்த்த கதிர் நீங்க எல்லாம் இல்லாம வீடு வீடாவே இல்லை என சொல்ல, தனம், உங்களை எல்லாம் பார்க்காம கண்ணன் என் தோள்ல சாய்ஞ்சு தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். நானே பயந்து போயிட்டேன் என மூர்த்தியிடம் சொல்கிறாள்
இதற்கு மூர்த்தி நீங்க இல்லாம ஒரு ஆளா இருந்து எங்க எல்லாரையும் பார்த்துக்கிச்சு மீனா என சொல்கிறான். மூர்த்தியின் அம்மாவும், ஆமா தனம் மீனாவுக்கு இத்தனை வகையான சமையல் செய்ய தெரியுமான்னு எனக்கே இப்போ தான் தெரியும். சூப்பரா சமைச்சுட்டா என சொல்கிறாள். இதை கேட்ட தனம் அத்தை வாயாலையே பாராட்டு வாங்கிட்டியே என சொல்கிறாள்.
இதன்பிறகு கடைக்கு கிளம்பும் மூர்த்தி ஜெகாவை சந்திக்கிறான் அப்போது அவர், கார் எல்லாம் வேஸ்ட் மாப்ளே. கைல பணம் இருந்தா ஒரு குட்டி யானை வாங்கு. கடை வேலைக்கு யூஸ் ஆகும் குடும்பத்தோடு எங்கயாச்சும் வெளியவும் போகலாம் என சொல்கிறான். இதை கேட்ட மூர்த்தி அதுதான் சரி என்று நினைக்கிறான். இதற்கிடையில் கண்ணனை சந்திக்கும் ஐஸ்வர்யா காதல் குறித்து வீட்டில் பேசும்படி கூறுகிறாள். ஆனால் தயக்கம் காட்டும் கண்ணன், கொஞ்சம் பொறுமையா இரு ஐசு, நான் ஏதாவது பண்றேன் என சொல்கிறான்.
அதற்கு ஐஸ்வர்யா, வேற வழியே இல்லை மாமா. நான் எங்க வீட்ல சொல்லிட்டேன். இப்போ நீதான் உங்க வீட்ல சொல்லணும் என சொல்கிறாள். அதற்கு கண்ணன், என்ன பண்றதுன்னு கொஞ்சம் யோசிக்கிறேன் ஐசு என சொல்லி அவளை அனுப்பி வைக்கிறான். இதன்பிறகு குடோனுக்கு வரும் மூர்த்தி கதிரிடம் நம்ம கடைக்கு சரக்கு ஏத்தி, இறக்க எவ்வளவு செலவு ஆகுது என்று கேட்கிறான். ஏன் அண்ணே இப்போ இத கேக்குறீங்க என ஜீவா, கதிர் இருவரும் கேட்கின்றனர். அப்போது ஜெகா சொன்ன ஐடியாவை மூத்தி சொல்ல, ஜீவா கதிர் இருவரும் நல்ல ஐடியா தான். குட்டி யானையே வாங்கிடலாம் என சொல்லும்போது இன்றைய எபிசோடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.