பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றியில் சித்ரா பங்கு… போட்டோ வெளியிட்டு நெகிழ்ந்த பிரபலம்!

Vijay TV Pandian stores Stalin muthu explains Chitra photo issue: சித்ராவை நெழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் முத்து; ரசிகர்கள் விமர்சனத்திற்கு விளக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 3 வருடங்கள் நிறைவு செய்துள்ளதை குறிப்பிடும் புகைப்படத்தில் மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் புகைப்படம் இல்லாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஸ்டாலின் முத்து.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின் முத்து, குமரன், வெங்கட், காவ்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் முத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சத்திய மூர்த்தியாக என்னை தேர்வு செய்தவர்களுக்கும், விஜய் தொலைக்காட்சியை சார்ந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் இத்தொடர் வெற்றியடைய முதற்முழு காரணமாகிய ரசிகர்களாகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவுகளோடு தொடர்ந்து பயணிக்கிறோம் என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த பதிவு ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானது. காரணம் அந்த புகைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் முல்லையாக நடித்து சித்ராவின் புகைப்படம் இடம்பெறவில்லை. தற்போது முல்லையாக நடிக்கும் காவ்யாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள், சித்ராவை எல்லாரும் மறந்துவிட்டதாக ஸ்டாலின் முத்துவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் முத்து, ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஆகட்டும், விஜய் தொலைக்காட்சி ஆகட்டும், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகட்டும், இவர்களின் ரசிகர்கள் ஆகட்டும் நாம் இத்தனை பேரும் இவர்களை மறக்க முடியுமா! பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். என்றும் உங்கள் நினைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ்! என்றும், உங்களை எங்களுக்கு யாரும் நினைவூட்ட வேண்டியதில்லை. ஏனென்றால், என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.. என்றும் உங்களின் நினைவுகளோடுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் சித்ரா புகைப்படத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்த மறைந்த வெங்கட் சுபா மற்றும் நெல்லை சிவா ஆகியோரது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandian stores stalin muthu explains chitra photo issue

Next Story
நாய் சேகர் கெட்டப்பில் மிரட்டிய டிவி நடிகை: யாருன்னு கண்டுபிடிங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X