விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது. மூர்த்தி குடும்பத்தின் மளிகைக்கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் வியாபாரத்தை பெருக்குவதற்கு மூர்த்தி குடும்பத்தார் எடுக்கும் முயற்சிகள் குறித்து சில நாட்களாக கதை செல்கிறது. அதில் இன்றைய எபிஷோடில்,
ஆட்டோவில் வைத்து அறிவிப்பு செய்தால் கூப்பன் விஷயம் மக்களிடம் எளிதாக போய் சேரும், என ஜீவா ஐடியா கொடுக்க மூர்த்தி அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் மூர்த்தி தனது மனைவி தனத்திடம், இந்த மாதிரி ரெண்டு தம்பிங்க இருந்தா என்ன வேணா செய்யலாம் என சொல்கிறார். அப்போது வெளியே செல்லும் ஜீவா ஆட்டோவை அழைத்து கொண்டு வருகிறான். ஆட்டோவிற்கான வாடகையாக அவர் கேட்கும் ஆயிரத்து ஐநூறு ரூபாயை கொடுத்து விடலாம் என ஜீவாவும் கதிரும் ஒத்துக் கொள்கின்றனர்.
ஆனால், அறிவிப்பு செய்பவரோ தனக்கு இரண்டாயிரம் ரூபாய் வேண்டும் என கேட்கிறார். அவரிடம் குறைத்துக் கேட்கும் போது, முடிவா இரண்டாயிரம் ரூபாய் இல்லன்னா நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். எனவே என்ன செய்வது என்று கதிரும், ஜீவாவும் யோசிக்கின்றனர். அப்போது முல்லை, போஸ்டர நீங்க ஒட்டுன மாதிரி, நீங்களே அறிவிப்பு செஞ்சுருங்க என சொல்கிறாள். ஆனால், என்னால எல்லாம் பேச முடியாது என கதிர் சொல்கிறான்.
ஆட்டோ ஒடலனாலும், ஆட்டோவிற்கு வாடகை கொடுக்க வேண்டும் என ஆட்டோக்காரர் சொல்கிறார். அறிவிப்பு செய்யாம காசு கொடுத்தா அண்ணன் திட்டுவாரே என இருவரும் யோசிக்கின்றனர். அப்போது பேசாம நானே பேசுறேன் என முல்லை சொல்கிறாள். சூப்பர் அப்ப நானும் உங்ககூட சேர்ந்து பேசுறேன் என மீனாவும் சொல்கிறாள். ஆனா இதெல்லாம் சரியா வராது, அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க என ஜீவா மறுக்கிறான். அதெல்லாம் திட்ட மாட்டாரு நாங்க பேசுறோம் என பிடிவாதமாக முல்லையும் மீனாவும் சொல்கின்றனர்.
ஆனாலும் கதிர், அண்ணிகிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணலாம் என்கிறான். அவுங்க இப்பதான் தூங்குறாங்க. போய்ட்டு வந்த பிறகு சொல்லிக்கலாம் என மீனா சொல்கிறாள். அதன்பிறகும் கதிர், ஜீவாவும் தயக்கம் காட்டுகிறனர். அப்போது மீனா ‘பொண்ணுங்கனா வீட்டு வேலை மட்டும்தான் பார்க்கணும் நினைக்குற சாதாரண ஆம்பளைங்களா நீங்க’ என கேட்கிறாள். அதன்பிறகு கதிரும் ஜீவாவும், முல்லை, மீனா அறிவிப்பு செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். முதலில் பேசுவதற்கு கதிரும், முல்லையும் செல்கின்றனர். பிறகு ஜீவாவும், மீனாவும் செல்லலாம் என முடிவு செய்கின்றனர்.
அதன்பிறகு ஆட்டோவில் கிளம்பிய பிறகு முல்லை தைரியமாக பேசுகிறாள். அவள் பேசுவதை பார்த்து கதிர் ஆச்சரியம் அடைகிறான். மக்களிடம் கூப்பன் பற்றியும், பரிசு பொருட்கள் பற்றியும் எடுத்து சொல்கிறாள் முல்லை. அவள் குரலை கேட்டு மூர்த்தியும், தனமும் வெளிய வந்து பார்க்கின்றனர். முல்லை கடைக்கு போயிருக்கான்னு தான என்கிட்ட சொன்ன, அப்புறம் இவ எப்படி இங்க என தனம் மீனாவிடம்கேட்கும் போது, நான் சும்மா சொன்னேன் என மீனா சொல்கிறாள்.
இதனால் கோபமடையும் தனம், பொம்பள பிள்ளைய ரோடு ரோடா கூட்டி போறது என்ன பழக்கம் என்று கேட்கிறாள். அறிவிப்பு செய்றவங்க நெறைய பணம் கேட்டாங்க அதான் என கதிர் சொல்கிறான். அப்போது ஜீவாவும் அங்கு வந்து விடுகிறான. நம்ம கடைக்காக தான செய்றோம் என கதிர் சொல்லும் போது, ஏன் அதை சொல்லிட்டு செய்ய மாட்டீங்களா என தனம் கேட்கிறாள். அப்போ உங்களுக்கு சொல்லிட்டு போகதது தான் பிரச்சனையா? நான் இப்ப சொல்லிட்டு போறேன் என மீனா நக்கலடிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil