பாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல!

ரொமான்ஸுக்காகவே பலர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைப் பார்த்து வருகிறார்கள்.

By: Updated: August 5, 2020, 05:22:49 PM

vijay tv pandian stores vijay tv serial tamil : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதுமே அந்தச் சேனலின் டாப் லிஸ்டில் இருக்கும் ஒன்று. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என மூன்று ஜோடிகள். இவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

அண்ணன் மூர்த்தி, தனது தம்பிகள் தான் உலகம் என்று வாழ்பவர். அவரது மனைவி தனமோ கொழுந்தனார்களை குழந்தையாக பாவிக்கும் மனம் கொண்டவர். இதனால் இவர்கள் இருவருமே தங்களுக்கென குழந்தை கூட பெற்றுக் கொள்ளவில்லை. ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை.

இப்படி ஒரு சலுகையா? ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்!

ஆரம்பத்தில் கதிருக்கும் முல்லைக்கும் ஒத்து வராவிட்டாலும், போகப்போக இருவருக்குள்ளும் புரிதல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி, இவர்களின் ரொமான்ஸுக்காகவே பலர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைப் பார்த்து வருகிறார்கள். இதற்கிடையே விஜய் டிவி ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளது

ஆரம்பத்தில் கதிருக்கு எப்படி முல்லையை பிடிக்காதோ, அதே மாதிரி தான் முல்லையின் அம்மாவையும் பிடிக்காது. தனது சொந்த அத்தையாக இருந்தாலும் கதிர் விலகியே இருந்தான். இப்போது கதிர்-முல்லை நெருக்கம் அதிகரிக்க, தனது மனைவியின் குடும்பத்தின் மீது கதிருக்கு பாசம், மரியாதை, பொறுப்பு அதிகமாகியுள்ளது.

உடம்பு சரியில்லாமல் இருக்கும், அத்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் தொடங்கி, அக்கறையுடன் ”நான் இருக்கிறேன்” என கூறுவதை வரை மகனுக்கு நெருக்கமான ஸ்னாத்தில் கதிர் இடம் பிடித்து விட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சிறந்த மருமகன் கதிர் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv pandian stores vijay tv serial tamil serial pandian stores serial hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X