ஆஹா, அழகு..! ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ?

ரசிகர் பட்டாளம் பல லட்சம் பெருகிய நிலையில், அவர்களை தன் வசம் தக்க வைத்துக் கொள்வதற்காக, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ், சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்த சித்ரா மறைந்ததை அடுத்து, முல்லை கதாபாத்திரத்தை காவியா ஏற்று நடித்து வருகிறார். சித்ராவுக்கு தான் முல்லை கதாபாத்திரம் ‘நச்’ என, அவரது மறைவை அடுத்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். சிறிதும் அயராது பாடுபட்டு, முல்லை கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம், தனது நடிப்பாற்றலால் அசத்தி வருகிறார் காவியா.

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நிலையில், பாண்டியன் ஸ்ரோர்ஸில் முல்லை ரோலுக்கான வாய்ப்பு வர, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முல்லையாக நுழைந்தார் காவியா. பாண்டியன் ஸ்டோர்ஸ் எண்ட்ரிக்கு பிறகாக, அவரின் ரசிகர் பட்டாளம் பல லட்சம் பெருகிய நிலையில், அவர்களை தன் வசம் தக்க வைத்துக் கொள்வதற்காக, தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அண்மையில், பார்ப்பவர்களை கொல்லை கொள்ளும் அழகில், ராணி வேடத்தில் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் காட்சித் தந்துள்ளார் சின்னத்திரை நடிகை காவியா. அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandiyan stores actress mullai kavya act like queen photoshoot viral images

Next Story
‘வெளியே தெரியாமல் என் மகள் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி’ குமரிமுத்து கண்ணீர் வீடியோ வைரல்vivek helps to kumarimuthu, actor vivek helps for comedy actor kumarimuthu, vivek kumarimuthu viral video, விவேக், குமரிமுத்துவுக்கு நடிகர் விவேக் செய்த உதவி, குமரிமுத்து மகள் திருமணத்துக்கு 2 லட்சம் ரூபாய் அளித்து உதவிய விவேக், kumarimuthu viral video, chinna kalaivaanar vivek, kumarimuthu viral video, vivek helps to kumarimuthus daughter marriage, விவேக் வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express