நிஜத்திலும் இவங்க அழகான குடும்பம்தான் போல: பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ஸ்பெஷல் கொண்டாட்டம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் குமரன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

vijay tv, pandiyan stores, pandiyan stores serial, pandiyan stores kumaran birthday, kumaran birthday celberation, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், pandiyan stores, tamil tv serial news, tamil serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹீரோ குமரனின் பிறந்தநாளை சீரியல் குழுவினர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதிலும், குமரனுக்காக ஸ்பெஷலாக அவருடைய படம் வரையப்பட்டு தாரிக்கப்பட்ட கேக்கை குமரன் வெட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சீரியல் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் இந்த சீரியலில் ஹீரோவாக கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் – முல்லை ஜோடி கதாபாத்திரங்கள் நிறைய ரசிகர்களைக் கவர்ந்த ஜோடியாக இருக்கிறது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹீரோ குமரனின் பிறந்தநாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் ஷ்பெஷல் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

குமரன் பிறந்தநாளில் தனது குடும்பத்தினர் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினருடன் ஸ்பெஷலாக அவருடைய படம் வரைந்த கேக்கை வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு அழகான குடும்பமாக ஒன்று சேர்ந்து குமரனுக்கு கேக் ஊட்டி அவருடைய பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் குமரன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. குமரன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் அழகான குடும்பமாக இருக்கின்றனர் என்று கூறி குமரனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv pandiyan stores serial hero kumaran birthday celebration photos

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com