vijay tv priya bhavani shankar : முன்பெல்லாம் வெள்ளித்திரையில் இருந்தவர்கள் தான் சின்னத்திரைக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் தற்போது, சின்னத்திரையில் இருக்கும் நிறைய பேர், வெள்ளித்திரைக்கு வருகின்றனர்.
Advertisment
இப்படி போனவர்கள் தான், சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் பலர். இது ஆரோக்கியமான விஷயமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் ஒருவரானவர் ப்ரியா பவானி சங்கர்.முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் தோன்றினார்.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது. இவரது நடிப்பில் வரவுள்ள திரைப்படங்கள் மாபியா, களத்தில் சந்திப்போம் ஆகியவை ஆகும்.
Advertisment
Advertisements
ஆரம்பத்தில் இருந்த ப்ரியா பவானி சங்கரின் ஸ்டைல், மேக்கப், ட்ரெஸிங் சென்ஸ் எல்லாம் இப்போது டாப் ரேண்ட்சுக்கு சென்று விட்டது. மெல்ல மெல்ல தன்னை மெருகேற்றி கொண்டு இப்போது ஹீரோயின்களுக்கான அனைத்து தகுதிகளுடன் ஜொலிக்கிறார் ப்ரியா.
நாகபட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் பிறந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். பின்பு மீடியா மீது இருந்த ஆர்வம் காரணம் தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக அவரது பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு புதிய தலைமுறை பக்க அவரின் திசை திரும்பியது. அப்போதே அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் ரெடியாவிட்டது.
சீரியல் என்றாலே அழுகை வேண்டாம் சாமி என்று இருந்தவர், முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தவர். அவ்வளவு தான் அப்படியே விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நடன நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் என பிஸியானார்.
முதன்முறை கோபம்:
தனது பெயரில் போலி கணக்கு தொடங்குப்பட்டதை அறிந்த ப்ரியா, இப்படி செய்யாதீர்கள் என்று ட்விட்டரில் கோபத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஒரு போதும், தான் நடிக்கும் நாடகம் மற்றும் படங்களுக்கு ப்ரியா பவானி சங்கர் டப்பிங் கொடுத்தது கிடையாது.
அடிக்கடி ஆஸ்திரேலியா பறக்கும் ப்ரியாவுக்கு அங்கு காதலர் இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.