Vijay Tv Priyanka Admitted in Hospital Video News : விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர் வி.ஜே.பிரியங்கா. பலர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தாலும், தனக்கான தனி இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா. ஜோடி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்தார் பிரியங்கா. பிரியங்கா தனது அயராத முயற்சியாலும், நகைச்சுவை திறத்தாலும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.
Advertisment
பிரியங்கா விஜய் டிவியில் மட்டுமல்லாது, தனது யூடியூப் சேனலிலும் கலக்கி வருகிறார். அவரது சேனலில், நேற்று இரவு ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. தற்போது அந்த வீடியோ ஏற்க்குறைய 2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. அப்படி பிரியங்கா வீடியோவுல என்னதான் இருந்துச்சினு பார்க்கலாம்.
கடந்த மாதம் 12-ம் தேதி பிரியங்காவுக்கு வயிறு கோளாறு ஏற்பட, சென்னை ரீலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனையில் தான் செய்த அனைத்து செயல்களையும் வீடியோவாக பதிவு செய்து, நேற்று இரவு யூடியூபில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு வயிறு செரிமான கோளாறு ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன கருமத்த சாப்பிட்டு இப்படி ஆனேனோனு தெரியலனு புலம்பிய பிரியங்க, சிறிது நேரத்திலேயே,, ‘உலகத்துல என்ன நடந்தாலும், நமக்கு சாப்பாடு தானு மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவரது ஹாஸ்பிட்டல் பார்ட் ஒன் வீடியோவில் பல நக்கல்களும், நையாண்டிகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து மருத்துவமனையில் தன்னால் அமைதியாக இருக்க முடியவில்லை என்பதற்காக, வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ளார். விரைவில், பார்ட்-2 வீடியோவும் வெளியாகும் என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil