scorecardresearch

தளபதி விக் வாங்கிருக்கலாம்ல டா… விஜய் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா

புதிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி எப்படி ஹிட் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ள விஜய் டிவி தமிழில் முன்னணி சேனலாக வலம் வருகிறது.

தளபதி விக் வாங்கிருக்கலாம்ல டா… விஜய் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா

விஜய் டிவியின் தொகுப்பாளி பிரியங்கா ராஜூ வுட்ல பார்ட்டி என்ற ஷோவில் நடிகர் விஜயின் விக் பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவி ரசிகர்களுக்கு பிடித்தமான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி இளைஞர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், புதிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி எப்படி ஹிட் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ள விஜய் டிவி தமிழில் முன்னணி சேனலாக வலம் வருகிறது.  

ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி விஜய் டிவி ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமை வெளிப்படுத்தும் தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியின் பெண் தொகுப்பாளினி என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் டி.டி. அவருக்கு அடுத்து சில தொகுப்பாளினிகள் வந்தாலும், தற்போது தனக்கென ரசிகர்கள் கூட்டத்த உருவாக்கி வைத்துள்ளவர் பிரியங்கா. இவரின் படபட பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்லாம். சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா 2-வது இடம் பிடித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது தனது தொகுப்பாளினி வேலையை சரியாக செய்து வரும் பிரியங்கா, தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராஜூ வுடல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் சாம்பியன் ராஜூவுடன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சமீபத்தில் வெளியான இந்நிகழ்ச்சியின் ப்ரமோவில், யோகி தலைவா விஜய் கெட்டப்பில் தோன்றியுள்ளார்.

அவரை பார்த்த பிரியங்கா உங்க ஹேர்ஸ்டைல் விஜய் மாதிரியே இல்லை என்று சொல்வதற்கு பதிலாக விஜய் விக் வாங்கிட்டு வந்து வச்சிருக்கலாம்ல இது ரஜினி விக் டா என்று கூறியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து யுனிவர்சல் ட்ரோல் மெட்டீரியல் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் விஜய் தனது முதல் படத்தில் இருந்து ஒரிஜினல் முடி இல்லாமல் விக் வைத்து தான் நடித்து வருகிறார் என்று பலரும் கேலி கிண்டல் செய்து வரும் நிலையில், விஜய் அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டே இருப்பதற்கும் விக்தான் காரணம் என்று கூறி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அப்படியெல்லம் ஒன்றும் கிடையாது விஜய்க்கு இருப்பது ஒரிஜினல் முடிதான் என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv priyanka say about actor vijay wag in reality show promo

Best of Express