/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-60.jpg)
vijay tv priyanka super singer
vijay tv priyanka super singer : விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு இருப்பார்கள் அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். விஜய் டிவி தொகுப்பாளர்கள் சிலர், திரையுலகிலும் கலக்கி வந்தாலும், இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார்.
பிரியங்கா எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்குபெற்றுவந்தார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.
செம பிஸியாக இப்போது சின்னத்திரை வட்டாரத்தில் இருக்கும் பெண் ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான். கூடிய விரைவில் விஹய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் கேம் ஷோவிலும் பிரியங்கா தான் ஆங்கர்.பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்க்கு பின்னரும் பிரியங்கா தொகுப்பாளினியாக கலக்கி வருவது இதில் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்று அவரே கூறியிருந்தார். எத்தனையோ நடிகர் நடிகைகளை பிரியங்கா பேட்டி கண்டிருந்தாலும் பிரியங்காவின் ஃபேவரெட் ஹீரோ தனுஷ் தானாம். இதை பலமுறை அவரே பகிவு செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.